அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: தானியங்கள்

ஓட்ஸ் 

  • அதிக நார்ச்சத்து நிறைந்தது (கரையக்கூடிய மற்றும் கரையாத) அதிக அளவு கரையக்கூடிய நார்ச்சத்து பி குளுக்கான் (5 கிராம் - 100 கிராம்) கொண்ட ஒரு கப் ஓட்ஸில்
  • அதிக அளவு முக்கிய அமினோ அமிலங்களைக் கொண்டது.  லினொலியிக் அமிலம் மற்றும் ஒலியிக் அமிலம் (குறைந்த மற்றும் அதிக கொழுப்பு)
  • தாது உப்புகள் : மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் (உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு)
  • வைட்டமின்கள் : பொலாசின், போலிக் அமிலம் (இதய வலிமைக்கு)
  • ஆன்டி ஆக்ஸிடென்ட் : அவரைரெமைட்ஸ் ஓட்ஸில் தனித்துவம் வாய்ந்த ஆன்டி ஆக்ஸடென்ட் ஆகும்.

அதிக ஆற்றல் கொண்டது : கரையக் கூடிய நார்ச்சத்து இருப்பதனால் ஓட்ஸட ஜீரணமாக நேரம் ஆகிறது.  எனவே இதில் ஆற்றலானது நீண்டநேரம் மெதுவாக வெளியாவதால் உடல் அளவிலும் மூளை அளவிலும் நீண்ட நேரம் ஆற்றல் அளிக்கக்கூடியது.

இதய நோயிலிருந்து பாதிப்பு குறைவு : இதில் கரையக்கூடிய நார்ச்த்து இருப்பதால் இதில் குறைந்த அளவெ எல்.டி.எல் (குறைந்த அடர்த்தி லிப்போ புரதம்) தீங்கு விளைவிக்கக் கூடிய கொழுப்பு உள்ளது.  குறையாத எச்.டி.எல் அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரதம் (நன்மை செய்யும் கொழுப்பு) உள்ளதால் இது இதய நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.  ஓட்சுடன் அதிக அளவு பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்தளவு கொழுப்பு சத்து கொண்ட பால் பொருட்கள் உட்கொள்வதால் இரத்த அழுத்த பாதிப்பில் இருந்து விலகலாம். 

இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது : கரையக்கூடிய நார்சத்து இருப்பதால் உணவு உண்டவுடன் உயரக்கூடிய குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது.  இதனால் சர்க்கரை வியாதி சமாளிக்க ஏற்றதாகும். 

ஓரே மாதிரி உருவ அமைப்பு (அ) உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க : ஓட்ஸில்  கரைக்கூடிய நார்ச்த்து இருப்பதால் இது நீரை உறிஞ்சு அளவில் பெரிதாகின்றன. எனவே இதனை உட்கொண்டால் வயிறு நிறைந்து காணப்படுவதுடன் நீண்ட நேரம் வராமல் சமாளிக்கப்படுகிறது. 
ஓட்ஸ் கஞ்சி தயாரிக்க வெந்நீர் அல்லது குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட பாலுடன் சேர்த்து சமைத்து அதனுடன் பழங்கள், கொட்டை வகைகள் மற்றும் வாசனை பொருட்கள் சேர்த்து உட்கொள்ளலாம். ஓட்ஸ் மற்ற பொருட்களுடன் சேர்த்தும் சப்பாத்தி, புரோட்டா அல்லது தோசை, இட்லி அல்லது ஊத்தப்பம் மாவுடன் சேர்த்தும் சமைக்கலாம்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015